கோட் மூவி அப்டேட் : அடுத்து நடக்கபோறத உங்களால Guess பண்ணவே முடியாதாம்..!

 

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் கோட் படம் அடுத்த வாரம் 5ஆம் தேதி உலகளவில் வெளிவரவுள்ளது. 

இந்த நிலையில், GOAT படத்தை குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் தானாம். தந்தை கதாபத்திரத்தில் ரஜினியையும், மகன் கதாபாத்திரத்தில் தனுஷையும் வைத்து எடுக்க வெங்கட் பிரபு நினைத்து இருந்தாராம்.

ஆனால், அதன்பின் டீ ஏஜிங் குறித்து விஷயங்கள் வெங்கட் பிரபுவிற்கு தெரியவர, இதன்பின் இந்த கதையை தளபதி விஜய்க்கு கூறியுள்ளார். இப்படி தான் GOAT படம் துவங்கியது என தகவல் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

மேலும், இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இந்த படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், GOAT படம் எந்த வகையான படம் என்பதை டிரைலரில் கூறியதாகவும் ஆனால் அதை யாரும் சரியாக டிகோட் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இப்படம் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் இருப்பதாகவும், படத்தில் அடுத்து என்ன நடக்கபோகுது என்பதை எளிதில் கண்டு பிடிக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் மங்காத்தா படம் போல் இப்படம் மிக வேகமாக செல்லும் எனவும், மங்காத்தா படத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் முழுக்க முழுக்க ஆண்களுக்கான படம் அதில் நண்பர்கள் எவ்வளவு மோசமாக ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி கொள்கிறார்கள் என்பதை காட்டும் ஒரு படமாக இருந்தது.

ஆனால் GOAT படம் அவ்வாறு இல்லாமல் ஒரு ஆண் மற்றும் அவர் குடும்பத்தை மையமாக வைத்து எடுத்த படமாக இருக்கும். காந்தி என்பவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு பகுதியை காட்டும் ஒரு படம் என கூறினார்.  ரசிகர்களுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.