பிரபல காமெடி நடிகரின் தாயார் காலமானார்... அதுவும் மகன் பிறந்த தினத்தில்...  ஆறுதல் கூறும் ரசிகர்கள்..! 

 
நெத்தியடி படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி  கொடுத்த காமெடி நடிகர் கிங்காங். இதை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து காமெடியில்  அசத்தியிருந்தார். இவர் நடனத்திலும் கில்லாடியாக இருந்து வந்தார். அவருடைய நடன அசைவுகள் பெரிதும் ரசிக்கப்பட்டது. அதன் பின்பு சில ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.

சில காலங்கள் கழித்து வடிவேலு உடன் இணைந்து போக்கிரி படத்தில் கம்பேக் கொடுத்தார். இந்த படத்தில் இருவரும் சேர்ந்து செய்த காமெடிகள் பெரும் வைரலானது. இவருக்கு அந்த திரைப்படம் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதனால் தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் பெற்றார்.

பாலிவுட்டில் இருந்தும் கிங்காங்குக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. முதலாவது படத்திலேயே ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு குட்டி வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகளும் உள்ளன.

இந்த நிலையில், நடிகர் கிங்காங் இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருடைய தாயார் மரணமடைந்து உள்ளார். இந்த விடயம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய தினம் 12 .30 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அவரது தாய், சற்று நேரத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். தனது பிறந்தநாள் அன்றே தனது தாய் இறந்ததால் மிகுந்த சோகத்தில் கிங்காங் ஆழ்ந்துள்ளார். தற்போது அவருக்கு உறவினர்கள், திரைத்துறையினர், பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றார்கள்.