உடல் மெலிந்து பரிதாப நிலையில் ரோபோ சங்கர்..!! என்ன ஆச்சு..??

நடிகர் ரோபோ சங்கர் உடல் மெலிந்து மிகவும் சோர்வாக காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இது அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் என்று கூறப்படுகிறது. 
 

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ரோபோ சங்கரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். அதை தொடர்ந்து மிம்கிரி ஷோக்கள், ஸ்டான் அப் காமெடி என நூற்றுக்கணக்கான மேடை நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதன்மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன. பாலாஜி இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘மாரி’ படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. அதை தொடர்ந்து ‘மாரி-2’, ’விஸ்வாசம்’, ‘வேலைக்காரன்’ என பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவருடைய மகள் இந்திரஜா சங்கரும் சினிமாவில் நடிகையாக உள்ளார். மெர்சல், விருமன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நடிகர் ரோபோ சங்கர் கட்டுமஸ்தான உடல்வாகை கொண்டவர். ஆனால் இப்போது அவர் மிகவும் உடல் மெலிந்து, சோர்வுடன் இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும், ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? அவர் நலமாக உள்ளரா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமீபத்தில் அவருடைய வீட்டில் வெளிநாட்டு கிளிகள் வளர்க்கப்பட்டதை அறிந்த வனத்துறை அதிகாரிகள், ரூ. 2 லட்சம் ரோபோ சங்கர் குடும்பத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.