வாழ்த்தும் ரசிகர்கள்...!! பாலாவுக்கு கிடைத்த அதிஷ்டம்...!

 

குக் வித் கோமாளி பக்கம் வந்த Kpy பாலா  செம ரைமிங் காமெடி செய்து பெரிய அளவில் புகழ் பெற்றார்.

அப்படியே நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தன்னை மக்களுக்கு சேவை செய்யும் நபராக மாற்றிக்கொண்டார்.சமீபத்தில் கூட காது கேட்காத குழந்தைகள் பலருக்கு மிஷின் வாங்கி கொடுத்துள்ளார். தான் செய்யும் உதவிகளை இன்ஸ்டாவில் பதிவிட்டதால் அதைப்பார்த்த பலரும் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள் என ஒரு மேடையில் பாலா கூறியிருந்தார்.

சின்னத்திரையிலேயே பெரிய அளவில் வளர்ந்து வந்த பாலாவுக்கு இப்போது வெள்ளித்திரையில் ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது அவர் ரணம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் பாலா நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.