வாழ்த்தும் ரசிகர்கள்..! இசை புயலுக்கு கிடைத்த உயரிய விருது..! 

 

 'ஆடுஜீவிதம்' என்கிற திரைப்படம் வெளியாகி மிக பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்திற்கு இசையமைத்ததன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள திரை உலகிற்கு திரும்பி இருந்தார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.  

இசை புயலின் பாடல்கள் குறித்து நான் அனைவரும் அறிந்ததே . இந்த நிலையில் தற்போது 2024ம் வருடத்திற்கான இசை விருதுகளில் உயரிய விருதாக பார்க்கப்படும் ஹாலிவுட் மியூசிக் இன மீடியா அவார்ட்ஸ் விருது நிகழ்ச்சிக்காக இந்த படத்தில் இடம் பெற்றிருந்த 'பெரியோனே' என்கிற பாடல், சிறந்த பாடல் பிரிவில் நாமினேட் செய்யப்பட்டது.

அதேபோல், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான இசை என்கிற பிரிவில் படம் நாமினேட் செய்யப்பட்டது. இதில் ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் இயக்குநர் பிளஸ்சி  அந்த விருதினை பெற்றுக் கொண்டார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.