குவியும் வாழ்த்துக்கள்..! பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வீட்டில் நடந்த திடீர் கொண்டாட்டம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி, காதல் முதல் கல்யாணம் வரை மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார் புறம் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை ரேமா அசோக்.
பாக்கியலட்சுமி சீரியலில் மாலினி கேரக்டரில் வில்லியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார். செழியனை ஒரு தலையாக காதலிக்கும் கேரக்டர் மற்றும் இவரது சைக்கோ தனமான காதல் என்பன ரசிகர்களுக்கு எரிச்சல் ஊட்டினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் எகிற வைத்திருந்தது. ஆனாலும் தற்போது இவரது கேரக்டரை காணவில்லை.
இவர் சீரியல் நடிகையாக மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பலருக்கும் பரீட்சையமாக இருப்பதோடு தொழில் முனைபவராகவும் காணப்படுகின்றார்.
இந்த நிலையில், நடிகை ரேமா சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். குறித்த பர்த்டே பங்க்ஷனில் அவருடைய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்கள்.
இதன் போது ரேமாவின் அண்ணன் அவருக்கு ஒரு மோதிரத்தை பரிசளித்துள்ளார். அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து அதற்கு நீண்ட கேப்சன் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில்., என்னுடைய அன்பான சகோதரனே! உங்களுக்கு எனது நன்றியை சொல்ல முயல்வதற்கு வார்த்தைகள் குறைவது போல தோன்றுகின்றது. நீங்கள் ஒரு மூத்த சகோதரராக மட்டுமில்லை ஒரு நங்கூரம் போலவும் கலங்கரை விளக்கத்தைப் போலவும் நீங்கள் தரும் ஆதரவு அசைக்க முடியாத அளவுக்கு உள்ளது என மேலும் பல எமோஷனல் பதிவுகளை குறிப்பிட்டுள்ளார்.