குவியும் வாழ்த்துக்கள்..!  பிரபல நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது..! 

 

நடிகை வித்யா பிரதீப் நடித்த திரைப்படம் தான் விருந்தாளி. இதில் ஹீரோவாக மைக்கல் ஈஸ்வர் நடித்து இருந்தார். இதில் நடிக்கும் போது அவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து மைக்கல் மட்டுமே சில படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் புகைப்பட கலைஞராக இருந்து வருகின்றார். ஆனாலும் திருமணத்திற்கு பிறகு தனது மனைவிக்கு உறுதுணையாக இருந்து அவரை பயோ டெக்னாலஜி முதுகலை பட்டம் வரை படிக்க வைத்து ஒரு நடிகையாக இருப்பதற்கும் சுதந்திரம் கொடுத்தார்.

இவர் நடித்த சைவம் திரைப்படம் தான் இவரது சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதை போல பசங்க 2 படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இதுவரை 35 படங்களுக்கு மேல் நடித்துள்ள வித்யா,  சன் டிவி ஒளிபரப்பான நாயகி சீரியலிலும் நடித்தார்.

இந்த நிலையில்,  கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைமாத கற்பனையாக போட்டோ ஷூட் செய்த வித்யா தற்போது அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.