குவியும் வாழ்த்துக்கள்..! பிரபல சீரியல் நடிகருக்கு பெண் குழந்தை பிறந்தது!

 

விஜய் டிவியில் நிறைய புதுமுக கலைஞர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் மகாநதி. பிரவீன் பென்னட் இயக்கி வரும் இந்த சீரியல் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தத் தொடரில் டாப் ஜோடியாக பார்க்கப்படுகின்றவர்கள் தான் விஜய் - காவேரி. இவர்களை வைத்து நிறைய புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

இந்த ஜோடிக்கும் விஜய் டெலி அவார்ட்ஸ் இல் விருதும் கிடைத்தது. இந்த கதையில் விஜய் - காவேரி இருவரும் எப்போது தங்களுடைய காதலை வெளிப்படுத்தி ஒன்று சேர்வார்கள் என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் பெரும் ஆவலாய் உள்ளார்கள்.

இந்த நிலையில், மகாநதி சீரியலில் நடிக்கும் நடிகருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதாவது மகாநதி சீரியலில் நிவின் கேரக்டரில் நடிக்கும் ருத்ரன் பிரவீன் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படம் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருவதோடு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.