குவியும் வாழ்த்துக்கள்..! இரட்டை குழந்தைகளுக்கு தாயான சீரியல் நடிகை..!

 

சத்யா சீரியல் மூலம் பிரபலமடைந்தவர்  தான்  ஜூலி. இவரின் நிஜப் பெயர் விஷாலாட்சி. ஆனால் எல்லோருமே அவரை  ஜூலி என்று தான் அழைப்பார்களாம்.

இவர் திரைப்படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமில்லாமல் டான்சர் ஆகவும் திகழும் இவர், விஜய் டிவி ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதை தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட இவர், சில வருடங்களாகவே காணாமல் போயிருந்தார். அதற்குப் பிறகு சத்யா சீரியல், சித்திரம் பேசுதடி சீரியலில் நடித்தார்.

இவருக்கு திருமணமாகி10 வருடங்கள் ஆன போதும் குழந்தை இல்லை என்று தங்கள் பட்ட கஷ்டம் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதன் பிறகு இரண்டு முறை கர்ப்பமாகியும் அந்த கர்ப்பம் தனக்கு நிலைக்கவில்லை என்றும் பேசியிருந்தார்.

இந்த நிலையில், சீரியல் நடிகை ஜூலிக்கு இன்றைய தினம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கும் நிலையில், இது தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டி உள்ளார். தற்போது அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.