குவியும் வாழ்த்துக்கள்..! அடுத்தடுத்து கர்ப்பமாகும் சீரியல் நடிகைகள்...! 

 

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் சீரியல் நடிகை ஆன ஸ்ரீதேவி தனக்கு இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்த செய்தி அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

அதன் பிறகு நடிகை சந்தியா அவரது திருமண செய்தி பற்றி ரசிகர்களுக்கு தெரிவித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மற்றும் ஒரு சீரியல் நடிகை தனது கர்ப்ப செய்தியை வெளியிட்டுள்ளார்.அதாவது கல்யாணப்பரிசு, பாவம் கணேசன், காயத்ரி, குணா போன்ற சீரியல் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் நடிகை நேஹா. இவருக்கும் சந்தன் கௌடா என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை போட்டோ ஷூட் செய்து அறிவித்துள்ளார்.