குவியும் வாழ்த்துக்கள்... விரைவில் பிக்பாஸ் நடிகருக்கு திருமணம்..!  

 
தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்று ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ்கான் என்பதும் இருவருமே திரையுலகில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வருவார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த தம்பதியின் மகன் ஷாரிக் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் அதில் அவர் 49 நாட்கள் வரை விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பெறும் 21 நாளில் அவர் வெளியேற்றப்பட்டார்.

இருப்பினும் அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக ’நேற்று இந்த நேரம்’ என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்த நிலையில் தற்போது ’ரிசார்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 29 வயதாகும் ஷாரிக் திருமணம் வரும் 8ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் குடும்ப நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் திரை உலக பிரபலங்கள் யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் திருமணத்திற்கு பின் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஷாரிக்கை திருமணம் செய்ய போகும் மணமகள் குறித்த எந்த தகவலையும் அவரது குடும்பத்தினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.