விரைவில் வெளியாகிறது சூழல் 2..!
Feb 11, 2025, 14:02 IST
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவான 'சூழல்' வெப் தொடர் அமேசன் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள்.
இந்த வெப் தொடரின் முதலாவது சீசன் வெற்றியடைந்த நிலையில் இதன் இரண்டாவது சீசனை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள் ரசிகர்கள்.
இந்த நிலையில், சூழல் வெப் தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 28ஆம் தேதி அமேசன் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என இந்தப் படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி அதிகாரவபூர்வமாகவே அறிவித்துள்ளனர். தற்போது இந்த தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.