யோகி பாபு நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ பூஜையுடன் தொடக்கம்..!!

 

கடந்த 2001-ம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, ராதாரவி, தேவயானி, வடிவேலு, சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ப்ரண்ட்ஸ்'. இந்தப் படத்தில் 'கான்ட்ராக்டர் நேசமணி' என்ற பிரபலமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றியால், இந்தக் கதாபாத்திரத்தின் பெயர் மிகவும் பிரபலமடைந்தது.

தற்போது 'கான்ட்ராக்டர் நேசமணி' என்ற பெயரிலேயே புதிய படமொன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வாதீஷ் எம்.எஸ். இயக்கவுள்ளார். இதில் யோகி பாபு, ஓவியா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் கதையை 'வால்டர்' படத்தின் இயக்குநர் அன்பு எழுதியுள்ளார். இந்தப் படத்தை அன்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கு ஒளிப்பதிவாளராக சுபாஷ் தண்டபாணி, இசையமைப்பாளராக தர்மபிரகாஷ், எடிட்டராக வெங்கட் ரமணன், கலை இயக்குநராக ஏ.ஆர்.மோஹன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது.

சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒருவருடைய பதிவால் #PrayForNesamani என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.