சர்ச்சையில் சிக்கி இருக்கும் நடிகர் மாரிமுத்து... அரைகுறை பெண்ணுக்கு போன் நம்பர் கொடுத்தாரா ?
தமிழ் நடிகர் மாரிமுத்து ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்தவர். தற்போது சீரியலிலும் மாஸ் காட்டி வருகிறார். குறிப்பாக திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இவரது கேரக்டர் வேறலெவலில் ஹிட் அடித்து உள்ளது. இப்படி பாப்புலரான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் மாரிமுத்து தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார். அதன்படி டுவிட்டரில் 18+ கண்டெண்ட்டுகளை போடும் கணக்கு ஒன்றிலிருந்து, அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு "Can I call you" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு நடிகர் மாரிமுத்துவின் பெயருடன் கூடிய டுவிட்டர் கணக்கில் இருந்து உடனடியாக ரிப்ளை வந்ததை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ரிப்ளையில் yes என பதிலளித்து தன்னுடைய மாரிமுத்துவின் மொபைல் நம்பரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதில் ஷாக்கிங் விஷயம் என்னவென்றால் அது உண்மையிலேயே நடிகர் மாரிமுத்துவின் மொபைல் நம்பர் தான். அந்த நம்பர் ட்ரூ காலரில் தேடிப்பார்த்து அது அவரது நம்பர் என உறுதியானதால் தான் இந்த டுவிட் வைரல் ஆனது. இது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகிவந்த நிலையில், இதற்கு மாரிமுத்துவின் மகன் அகிலன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
அந்தப் பதிவில் கமெண்ட் செய்திருப்பது எனது தந்தையின் அக்கவுண்ட் கிடையாது. அவரின் போன் நம்பர் பெரும்பாலானோருக்கு தெரியும். அதனால் யாரோ அதனை தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார் அவரின் இந்த விளக்கத்துக்கு பின்னர் அந்த போலி பதிவு டெலிட் செய்யப்பட்டு உள்ளது.