சர்ச்சையாகும் பிரச்சினை! திருமணம் குறித்து விமர்சித்த ஷகிலா!
Sep 24, 2024, 07:05 IST
பிரியங்காவுக்கு ஆதரவாக நடிகை ஷகிலா பேசி இருந்தார். ஷகிலாவும் குக் வித் கோமாளியில் இதற்கு முன் போட்டியாளராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவரை எல்லோரும் 'ஷகிலா அம்மா' என்று தான் கூப்பிடுவார்கள். ஷகிலா தான் வேற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததை விமர்சித்து இருந்ததற்கு தற்போது மணிமேகலை பதிலடி கொடுத்து இருக்கிறார்.
"நான் ஓடிப்போய் திருமணம் செய்ததற்கு என் சொந்த அம்மாவிற்கே எந்த பிரச்னையும் இல்லை. நன்றாக தான் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். இந்த மம்மிக்கு என்னவாம்.. வித்தியாசமா கூவுனாங்க" என மணிமேகலை கூறி இருக்கிறார். இது ஷகிலா சொன்னதுக்கு பதிலடித்தான் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.