டோலிவுட்டில் கிளம்பிய சர்ச்சை..! அல்லு அர்ஜுனை திடீரென அன்ஃபாலோ செய்த ராம் சரண்..!

 

ராம் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய உறவினரான நடிகர் அல்லு அர்ஜுனை அன்ஃபாலோ செய்துள்ளார். இந்த சம்பவம் டோலிவுட் சினிமாவில் பேசு பொருளாக மாறி உள்ளது. மேலும் இதற்கான காரணங்கள் என்னவென்று ரசிகர்களும் தீவிரமாக தேடி வருகின்றார்கள்.

அதாவது ராம் சரனும் அல்லு அர்ஜுனும் உறவினர்கள். இவர்களுக்குள் நல்ல நட்பும் காணப்படுகிறது. ஆனாலும் திடீரென ராம் சரண் அல்லு அர்ஜுனன் இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

மேலும் இது தொடர்பான ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த சர்ச்சைக்கு ராம் சரணும் எந்த ஒரு பதிலையும் கொடுக்கவில்லை. ஆனால் இது உண்மை இல்லை என்று ஒரு தரப்பு விவாதித்து வருகின்றது. ஆனால் இது தேர்தல்  சமயத்தில் நடந்த குடும்ப சண்டை என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.