சாதனை படைத்த " கூலி" திரைப்படம்..!

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தினை அமேசான் பிரைம் நிறுவனம் 120 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரஜினி நடித்த படங்களில் டிஜிட்டல் விற்பனையில் அதிக பெறுமதியான திரைப்படம் 2.0 இப் படம் 110 கோடி விலை போயுள்ளதுடன் தற்போது கூலி படத்தின் தொகை அதை விட அதிகரித்து சாதனை படைத்துள்ளதாக ரஜினி தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படம் மே மாதம் வெளியாகவுள்ளதாக பல தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது குறித்த படத்தின் வெளியீட்டு தேதியினை படக்குழு ஆகஸ்ட் 16 தேதி ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. மேலும் இது சுதந்திர தின விடுமுறை நாட்கள் ,கிருஷ்ண ஜெயந்திக்குள் வருவதால் படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது .