வீரப்பனின் புதையலை தேடும் கவ்பாய் யோகி பாபு..!

 
சந்தன கடத்தல் வீரப்பன் மீதான பிம்பத்தை வைத்து தமிழ் சினிமாவில் பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளன. அதில் வனப்பகுதிகளுக்குள் நிறைய புதையலை அவர் புதைத்து வைத்திருக்கிறார் என்றும், அதை தேடும் பணிகள் அவ்வப்போது நடைபெறுவதாகவும் கதைகள் வெளிவருவதுண்டு.

இதுபோன்ற ஒரு கதையை மையப்படுத்தி உருவாகி வரும் படம் தான் ’வீர்ப்பனின் கஜானா’. யாஷ் என்பவர் இயக்கும் இந்த படத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். காமெடி கலந்த அட்வெஞ்சர் படமாக இது தயாராகி வருகிறது.

வீரப்பன் வனப்பகுதிக்குள் ஒழித்து வைத்திருக்கும் புதையலை தேடி செல்லும் குழுவினர் தொடர்பான படமாக இது தயாராகிறது. கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஞானசேகரன் இசை அமைக்கிறார். படத்தை சாம்ஸ் தயாரிக்கிறார்.