ஒரே கல்பில் குடித்துவிட்டு பாட்டிலை தூக்கி வீசிய கீர்த்தி சுரேஷ்..!!

தசரா படத்தில் ஒரே மடக்கில் முழு மது பாட்டிலையும் குடித்து காலி செய்வது போன்று, நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் முன்னிலையில், ஒரே மடக்கில் பாட்டிலை குடித்துவிட்டு காலி செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

தெலுங்கில் ‘நேனு லோக்கல்’ படத்தை தொடர்ந்து மீண்டும் நானியுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ‘தசரா’. இந்த படம் தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு வரும் 30-ம் தேதி வெளிவரவுள்ளது. 

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் வென்னலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின், ப்ரோமோஷன் பணிகள் தற்போது மும்பையில் நடந்து வருகிறது. அப்போது தசரா படத்தில் நானி மது குடிக்கும் ஸ்டைலை, கீர்த்தி சுரேஷை நடித்துக் காட்டச் சொல்லி ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உடனடியாக கீர்த்தி சுரேஷ் அருகிலிருந்த கூலிங் ட்ரிங்ஸ் பாட்டிலை எடுத்து, ஒரே மடக்கில் குடித்துவிட்டு ஸ்டைலாக தூக்கி வீசினார். இதை பார்த்து நானி உள்ளிட்ட தசரா படக்குழுவினர் மற்றும் அரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் விசிலடித்து ஆர்பறித்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.