தன் குழந்தைக்கு பெயர் சூட்டிய தீபிகா படுகோன் - ரன்வீர் தம்பதி..! 

 

பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோன் ரன்வீர் சிங் எனும் முன்னனி நடிகரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது 

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தங்கள் குழந்தையின் பெயரை தம்பதியினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் கால்களின் புகைப்படத்தை பகிர்ந்து, “துவா படுகோனே சிங். ’துவா’ (Dua) என்றால் பிரார்த்தனை என்று பொருள். எங்களின் பிரார்த்தனைக்கு கிடைத்த பதில் எங்கள் மகள். அதனால் தான் இந்தப் பெயரை சூட்டினோம். எங்கள் மனம் முழுவதும் அன்பால் நிறைந்திருக்கிறது” என பதிவிட்டுள்ளனர்.