புதிய ஆட்டத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்... வெளியான ப்ரோமோ..! 

 

சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்த வாரம் நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதன்படி சத்யா விஷயத்தில் கோவப்பட்ட விஜயா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு முத்துவும் மீனாவும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. வெளியே போக வேண்டும் என சொல்கின்றார். மீனா எந்தவித தப்பையும் செய்யவில்லை அதனால் அவர் இங்கேதான் இருப்பார் என்று அண்ணாமலை செல்கின்றார்.

இதனால் கோபப்பட்ட விஜயா பெட்டியுடன் கிளம்பி பார்வதி வீட்டுக்கு வருகின்றார். அங்கு பார்வதியும் தனது மகனை மருமகள் பிரித்து விட்டதாகவும் ஆனால் மீனா அப்படி இல்லை ஒரு காலத்தில் ஸ்ருதியும் ரோகிணியும் அப்படி செய்து கொண்டாலும் மீனா நல்ல பொண்ணு என எடுத்து சொல்லுகிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில், பார்வதி வீட்டுக்கு வந்த அண்ணாமலை சத்யா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்குமாறு சொல்லுகின்றார். அதற்கு விஜயா நான் வாபஸ் வாங்க வேண்டும் என்றால் முத்துவும் மீனாவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று சொல்லுகின்றார்.

அதற்கு அண்ணாமலை பிடிவாதமும் ஒரு வியாதி தான் என்று சொல்லி செல்லுகின்றார். எனவே முத்து, மீனா வீட்டை விட்டு வெளியேறுவார்களா? அவர்களுடன் அண்ணாமலையும் வெளியேறுவாரா?  ரோகினியின் கபட நாடகம் பிடிபடுமா  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

<a href=https://youtube.com/embed/VvGPIDHBHxQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/VvGPIDHBHxQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">