மறுவீடு செல்லும் தனுஷ்-அக்ஷயா! வைரலாகும் வீடியோ இதோ...!

 

நெப்போலியன் மூத்த மகன் தனுஷின் திருமணம் அக்ஷயா என்ற பெண்ணுடன் ஜப்பானில் நடைபெற்றது. இதற்கு பல பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மகன் தனுஷின் சிகிச்சைக்காக பலவருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார் நெப்போலியன். தனுஷின் கல்யாணத்தில் தாலி கட்டும் நேரத்தில் கண்கள் கலங்கிய படி நெப்போலியன் இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்த நிலையில் அக்ஷ்யா திருமணத்திற்கு பின் மறுவீடு செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் அனைவரும் தம்பதியினருக்கு ஆசீர்வாதம் செய்து வாழ்த்துகின்றனர். இதோ அந்த அழகிய வீடியோ.