தனுஷ் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!
தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட நடிகரான தனுஷ், படத் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். மூன்று, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கா முட்டை, காக்கிச்சட்டை, மாரி, மாரி 2, காலா போன்ற படங்களை அவர் தயாரித்துள்ளார்.
தன்னுடைய வுண்டர்பார் நிறுவனம் சார்பில் , தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி வேறு ஹீரோக்கள் நடிக்கும் படங்களையும் தனுஷ் தயாரித்துள்ளார். ஆனால் ‘மாரி-2’, ‘காலா’, ‘காக்கிச் சட்டை’ போன்ற தொடர் தோல்விப் படங்களால் வுண்டர்பார் நிறுவனம் மூடப்பட்டது.
இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் தயாரிப்புப் பணிகளில் தனுஷ் கவனம் செலுத்துகிறார். அதற்காக இயக்குநர் மாரி செல்வராஜிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அவர் வுண்டர்பார் நிறுவனத்துக்கு படம் தாரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த படத்தை தயாரிப்பது மட்டுமின்றி, ஹீரோவாக தனுஷ் நடிக்கிறார். ஏற்கனவே இந்த கூட்டணி ‘கர்ணன்’ படத்தில் இணைந்து, சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. மீண்டும் தனுஷ், மாரி செல்வராஜ் இணைந்து உருவாகும் படத்துக்கு ‘புரொடக்ஷன் நம்பர் 15’ என்று தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.