தனுஷ் - ஆனந்த் எல். ராய் - ஏ.ஆர். ரஹ்மான்: மீண்டும் உறுதியானது கூட்டணி..!!

ராஞ்சனா, அந்தரங்கி ரே படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ் மற்றும் ஆனந்த் எல். ராய் இணைந்து பணியாற்றும் இந்தி படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
தமிழில் பிஸி நடிகராக இருந்தபோது, தனுஷ் நடித்த முதல் இந்திப் படம் தான் ராஞ்சனா. ஆனந்த் எல். ராய் இயக்கத்தில், சோனம் கபூர் கதாநாயகியாக நடித்த இப்படத்தில் தனுஷ் சிறப்பான ஃபெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தினார். 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இன்னும் அந்த படத்தில் பாடல்கள் டிரெண்டிங்கில் உள்ளன.

அதை தொடர்ந்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் படத்தில் தனுஷ் நடித்தார். ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது. அதற்கு பிறகு மீண்டும் ஆனந்த் எல். ராய் உடன் கைக்கோர்த்த தனுஷ் 2022-ம் ஆண்டு ‘அத்திரங்கி ரே’ என்கிற படத்தில் நடித்தார். அப்படத்தில் அக்‌ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் படம் தோல்வியை தழுவியது. 

இப்போது தனுஷின் நான்காவது இந்திப் படத்தை ஆனந்த் எல். ராய் இயக்குகிறார். இந்த கூட்டணி மூலம் இந்தியில் உருவாகும் மூன்றாவது படமாகும். ‘தே இஷ்க் மேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தின் அறிமுக வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர் கெட்-அப்பில் தனுஷ் நடித்துள்ள அந்த வீடியோவுக்குச் சமூகவலைதளங்களில் வரவேற்பு அதிகரித்து வருகின்றது. ஆனந்த் எல். ராய் மற்றும் தனுஷின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த ஏ. ஆர். ரஹ்மான் தான் இப்புதிய படத்துக்கும் இசையமைக்கிறார்.

இது ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த படத்தின் டைட்டில் டிராக்கை தான் இப்படத்தின் அறிமுக வீடியோவுக்கு பயன்படுத்தியுள்ளனர். இப்போதைக்கு படத்தின் பெயர், நடிகர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளரை தவிர படம் குறித்து வேறெந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

தமிழில் பிஸி நடிகராக இருந்தபோது, தனுஷ் நடித்த முதல் இந்திப் படம் தான் ராஞ்சனா. ஆனந்த் எல். ராய் இயக்கத்தில், சோனம் கபூர் கதாநாயகியாக நடித்த இப்படத்தில் தனுஷ் சிறப்பான ஃபெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தினார். 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இன்னும் அந்த படத்தில் பாடல்கள் டிரெண்டிங்கில் உள்ளன.

அதை தொடர்ந்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் படத்தில் தனுஷ் நடித்தார். ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது. அதற்கு பிறகு மீண்டும் ஆனந்த் எல். ராய் உடன் கைக்கோர்த்த தனுஷ் 2022-ம் ஆண்டு ‘அத்திரங்கி ரே’ என்கிற படத்தில் நடித்தார். அப்படத்தில் அக்‌ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் படம் தோல்வியை தழுவியது. 

கேப்டன் மில்லர் கெட்-அப்பில் தனுஷ் நடித்துள்ள அந்த வீடியோவுக்குச் சமூகவலைதளங்களில் வரவேற்பு அதிகரித்து வருகின்றது. ஆனந்த் எல். ராய் மற்றும் தனுஷின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த ஏ. ஆர். ரஹ்மான் தான் இப்புதிய படத்துக்கும் இசையமைக்கிறார்.

<a href=https://youtube.com/embed/DzoTTgv0wzk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/DzoTTgv0wzk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">