நயன்தாராவிற்கும் தனுஷ் பாலியல் தொல்லை கொடுத்திருக்கலாம் - புயலை கிளப்பிய பிரபல பத்திரிக்கையாளர் சேகுவேரா..! 

 

நயன்தாரா - விக்கி தொடர்பான திருமண டாக்குமென்டரி இன்று வெளியாகிறது. ஆனால் இவர்களுடைய திருமணம் நடைபெற்று கிட்டத்தட்ட இரண்டு அரை வருடங்கள் ஆகியுள்ளன. எனினும் இந்த ஆவணப்படம் வெளியாவதற்கு தடையாக இருந்தது தனுஷ் தான் என நேரடியாகவே குற்றம் சாட்டி இருந்தார் நயன்தாரா.

இந்த நிலையில், நயன்தாரா - தனுஷ் விஷயம் தொடர்பாக பிரபல பத்திரிக்கையாளர் சேகுவேரா ஜெய்சங்கர் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தற்போது அவருடைய கருத்துக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், நயன்தாரா வெளியிட்ட அனைத்தை விஷயங்களிலும் சில விஷயங்களை நேரடியாகவும் சில விஷயங்களை மறைமுகமாகவும் கூறியுள்ளார். அதாவது தனுஷ் ஒன்றும் உத்தமர் கிடையாது. யாருக்கு தெரியும் நயன்தாராவிற்கும் தனுஷ் பாலியல் தொல்லை கொடுத்திருக்கலாம்.

திருமணம் ஆகிவிட்டது என்பதற்காகவும் இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டது என்பதற்காகவும் உத்தமராகவும் ஏகப்பட்ட விரதம் இருக்கக் கூடியவரா என்ன? தனுஷ் மட்டும் இல்லை விஜய் போன்ற நடிகர்களும் தங்களுடன் நடிக்கும் நடிகைகள் அடிமை போல தான் இருக்க வேண்டும் என நினைக்கின்றார்கள்.

நயன்தாரா விஷயத்தை பொறுத்த வரையில் தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்டார் என்றால் அது அவருக்குள் உள்ள காழ்ப்புணர்வு  தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. படப்பிடிப்பு தளத்தில் கூட தனுஷ் அனைவரும் அடிமையாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர். ஆனாலும் தனுஷ் ஏன் பணம் கேட்க  வேண்டும். அவரிடம் இல்லாத பணமா? அவர் பணத்திற்காக அப்படி நடக்கவில்லை என தெரிவித்து உள்ளார்.