தனுஷ் பட நடிகைக்கு பெண் குழந்தை..! 

 

தனுஷ் இந்தியில் நடித்த ‘ராஞ்சனா’, ‘தனு வெட்ஸ் மனு’, ‘சில்லர் பார்ட்டி’, ‘வீர் தி வெட்டிங்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார் பிரபல இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர்.இவர், தன் நீண்ட நாள் காதலரும் சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவருமான ஃபஹத் அகமதுவை திருமணம் செய்துகொண்டார்.

இதை தொடர்ந்து, ஸ்வரா பாஸ்கர் ஜூன் மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்த நிலையில், தற்போது ஸ்வரா பாஸ்கருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த தகவலை அவரே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ்வரா பாஸ்கருக்கு திருமணம் ஆகி 7 மாதங்களே ஆகும் நிலையில்... குழந்தை பிறந்துள்ளதால், திருமணத்திற்கு முன்பே ஸ்வரா கர்ப்பமாக இருந்தாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.