தனுஷ் பட நாயகிக்கு திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா? 

 

நடிகை மேகா ஆகாஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேகா ஆகாஷின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், சாய் விஷ்ணு என்பவரை மேகா ஆகாஷ் நீண்டநாட்களாக காதலித்து வந்தார். எனினும் தன்னுடைய காதலைப் பற்றி வெளியே சொல்லாமல் இருந்தவந்த அவர், முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.அதில், “என்னுடை ‘விஷ்’ உண்மையாகிவிட்டது. இனி என்றென்றும் காதல், சிரிப்பு, மகிழ்ச்சி. என் வாழ்வின் காதலுடன் எனக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் மேகா ஆகாஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.