விரைவில் 'தர்மதுரை 2' அப்டேட்; தயாரிப்பாளர் தகவல்..!!
Oct 15, 2021, 06:35 IST
2016-ம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தர்மதுரை'. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளர் யுவன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர். ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. இதனை ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். “விரைவில் 'தர்மதுரை 2' அப்டேட்” என்று தெரிவித்துள்ளார். இதனை யார் இயக்கவுள்ளார், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற விவரத்தை ஆர்.கே.சுரேஷ் வெளியிடவில்லை.