தோனி தயாரித்துள்ள எல்.ஜி.எம் பட டீசர் எப்படி இருக்கு..??
கடந்த சில மாதங்களுக்கு மகேந்திர சிங் தோனி தனது மனைவியின் தலைமையில் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்கிற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். அதன்படி அந்நிறுவனம் தயாரித்த முதல் படமாக எல்.ஜி.எம் உருவாகியுள்ளது.
’லெட்ஸ் கெட் மேரிட்’ என்பதன் சுருக்கம் தான் எல்.ஜி.எம் ஆகும். ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா காதல் ஜோடியாக நடித்திருக்கும் இந்த படத்தில் நதியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
வெறும் 49 நொடிகள் மட்டுமே ஓடும் டீசர் படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை அதிகரிக்கிறது. மேலும் இப்படத்தில் யோகி பாபு, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரமேஷ் தங்கமணி என்பவர் படத்துக்கு இசையமைத்து இயக்கியுள்ள நிலையில், மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இருவரும் சேர்ந்து எல்ஜிஎம்’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.