பொய் புகார் அளித்தாரா சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதா?

 

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரட்சிதா மஹாலெட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்‘ தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் இதே தொடரில் நடித்து வந்த தினேஷ் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது இருவருக்குமிடையே பிரச்சினை முற்றிப்போய் காவல் நிலையம் வரை சென்றுவிட்டது. தனது கணவரான தினேஷ் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி மிரட்டுவதாக ரட்சிதா அண்மையில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து இருவரிடமும் விசாரணை நடத்திய காவல் துறையினர் விவாகரத்து பெற நீதிமன்றத்தை செல்லுமாறு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது ரட்சிதாவின் புகார் குறித்து விளக்கமளித்துள்ள தினேஷ், தனது செல்போனில் ரட்சிதாவுடன் பேசிய சேட் பாக்ஸை காட்டி தான் ஆபாசமாகவோ, திட்டியோ ரட்சிதாவிற்கு மெசேஜ் அனுப்பவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், காவல் நிலையத்தில் ரட்சிதாவின் நடத்தையை வைத்து பார்க்கும் போது இனி சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்பதை புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.