அற்புதம்  படத்தை இயக்கிய இயக்குநர் அற்புதன் காலமானார்..! 

 

நடிகர் ராகவா லாரன்ஸ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான படம் அற்புதம்.

அந்த படத்தை இயக்கிய இயக்குநர் அற்புதன் சமீபத்தில் சாலை விபத்தொன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார்…அது பெரிதும் அதிர்ச்சி தந்தது…சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. 

ராகவா லாரன்ஸ் நடித்த அற்புதம் திரைப்படம் மட்டுமன்றி 2006-ல் ஷாம், நித்யா தாஸ் நடிப்பில் வெளியான மனதோடு மழைக்காலம் மற்றும் செப்பவே சிறு காளி உள்ளிட்ட படங்களையும் இவர் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது…

ராகவா லாரன்ஸை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதன் நடிகர் ஷாமுக்கும் கவிதை போன்ற ஒரு காதல் படத்தை கொடுத்தார்…இந்நிலையில் அவரது திடீர் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் துயரில் ஆழ்த்தி இருக்கின்றது..இப்படி ஒரு சோகமா என பலரும் வருத்தத்தில் இருக்கின்றனர்…