இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்..!
.பரியேறும் பெருமாள் தான் மாரி செல்வராஜின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. பரியேறும் பெருமாள் கொடுத்த நல்ல அறிமுகத்தால் தனது இரண்டாவது படத்திலேயே தனுஷுடன் இணையும் வாய்ப்புக் கிடைத்தது.
அதன்படி தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியான கர்ணன் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் தொடர்ச்சியாக உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில் நடித்த மாமன்னன் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். கடந்த ஜூன் மாதம் வெளியான மாமன்னன் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேசியதும் சர்ச்சையாக்கப்பட்டது.
இதனிடையே மாமன்னன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தனது 4வது படத்தைத் தொடங்கினார் மாரி செல்வராஜ். இந்தப் படம் ‘வாழை’ என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. கலையரசன், நிகிலா விமல் ஆகியோருடன் சிறுவர்கள் சிலரும் வாழை படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சின்ன பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் நடைபெற்றது.
இந்நிலையில், வாழை திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது. தியேட்டரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட வாழை, ஓடிடியில் வெளியாவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. வாழை படத்தைத் தொடர்ந்து துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ். இந்தப் படம் கபடி விளையாட்டை பின்னணியாக வைத்து உருவாகி வருகிறது.