விக்ரமன் வீட்டுக்கு வந்த உறவினரின் வாகனம் பட்டப்பகலில் திருட்டு..!!
 

இயக்குநர் விக்ரம் வீட்டுக்கு வந்த உறவினர் இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருடப்பட்டுள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தமிழ் சினிமாவில் குடும்பக் கதைகளை படமாக்கி வரவேற்புப் பெற்ற இயக்குநர் விக்ரமன். இவர் தற்போது சென்னையிலுள்ள அசோக் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரை சந்திக்க ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த விக்ரமனின் உரவினர் ருக்குமணி என்பவர் அசோக் நகருக்கு வந்துள்ளார்.

இவர் கடந்த 5-ம் தேதி விக்ரம் வீட்டுக்கு காலை 11 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பும் போது, வாசலில் ஸ்கூட்டர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்த போது 2 இளைஞர்கள் முகத்தை மறைத்துக் கொண்டு வந்து  வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

உடனடியாக ருக்குமணி குமரன் நகர் காவல்துறையில் புகார் அளித்தார். அதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. தனியார் நிகழ்ச்சிக்கு இச்சம்பவம் தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குநர் விக்ரம், தன் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்ததே இல்லை என்று கூறினார்.