முதலமைச்சர் ஸ்டாலினை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் மரணம்..!
 

 

முதலமைச்சர் ஸ்டாலினை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த இயக்குநர் சொர்ணம் சென்னையில் காலமானார். அவருடைய உடலுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை கொட்டிவாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இயக்குநர் சொர்ணம் (88) வயது மூப்பு காரணமாக காலமானார். இவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின் முதன்முதலாக நடித்த “ஒரே ரத்தம்” என்கிற படத்தை இயக்கியவர் ஆவார்.

அதை தொடர்ந்து கமல்ஹாசன், சிவக்குமர், முத்துராமன், ஜெய்சங்கர் என அப்போதைய முன்னணி கதாநாயகர்கள் நடித்த பல்வேறு இடங்களை இயக்கிய பிரபலமானார் சொர்ணம். மேலும் எம்.ஜி. ஆர் நடித்த நம்நாடு, தாயின் மடியில், குடியிருந்த கோயில், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட 11 படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார். 

வயது மூப்பு காரணமாக மரணமடைந்த சொர்ணம் வீட்டுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் இருவரும்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவருடைய குடும்பத்தாருக்கு இருவரும் இரங்கல் தெரிவித்தனர்.