மீண்டும் சினிமாவில் டிஸ்கோ நடிகை; ரீ-என்ட்ரி படத்தில் யார் ஹீரோ தெரியுமா?
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி பல மொழிகளில் நடித்தார். பல ஆண்டுகளாக சினிமாவில் தென்படாமல் இருந்த டிஸ்கோரி சாந்தி சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
துவக்கத்தில் நாயகியாக நடித்து வந்த இவர், அது கைக்கொடுக்காததால், ஐட்டம் பாடல்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைத்தது. பின் காலத்தில் அதையே தன்னுடைய கேரியராக மாற்றிக்கொண்டார்.
இவர் 1996ம் ஆண்டு தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பிலிருந்து விலகி குடும்பத்தோடு ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். இந்த தம்பதிக்கு, அக்ஷரா,என்ற மகளும், ஷஷாங்க் , மேகம்ஷ் என்ற மகனும் உள்ளனர்.
ஸ்ரீஹரி கல்லீரல் பாதிப்பால் காரணமாக உயிரிழந்தார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். கணவரின் மறைவுக்கு பிறகு குடிக்கு அடிமையாகி, மனதளவில் மிகவும் பாதித்து தினமும் குடித்து குடித்து உடலை கெடுத்துக்கொண்டார்.
தற்போது அதிலிருந்து மீண்டு இருக்கும் நடிகை டிஸ்கோ சாந்தி லாகவாரன்ஸின் சகோதரர் எல்வினுடன் புல்லட் படத்தில் நடித்து வருகிறார். அமானுஷ்ய கதைகளத்தில் தயாராகி வரும் இத்திரைப்படத்தில் நடிகை டிஸ்கோ சாந்தி ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு டிஸ்கோ சாந்தி புல்லட் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் வைஷாலி ராஜா, சுனில் அரவிந்த், ஆகாஷ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
அப்படத்தின் டீசரை நடிகர் எஸ்.ஜே. சூர்யா, பிரித்திவிராஜ், ஜிவி பிரகாஷ் ஆகியோர் அண்மையில் வெளியிட்டனர். 1997 முதல் படங்களில் நடிக்காத சாந்தி, இந்த படத்தில் ஒரு ஜோதிடராக நடித்துள்ளதாகத் தெரிகிறது, இதன் டீசரை நடிகர் விஷால் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இது பார்வையாளர்களின் உற்சாகத்தை அதிகரிக்கிறது
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், அருள்நிதி நடித்த ‘டைரி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குநர் இன்னாசி பாண்டியன் உடன் மீண்டும் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் இந்த படத்தை தயாரித்துள்ளார்.