தர்ஷா குப்தா பிக்பாஸில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

 

தர்ஷா குப்தாவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் இரட்டை ரோஜா தொடரிலும் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவருக்கு சினிமாவிலும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதன்முறையாக நடிகர் ரிச்சார்ஜ் ரிஷிக்கு ஜோடியாக ருத்ரதாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பின் ஓ மை கோஸ்ட் என்ற பேய் படத்திலும் நடித்தார்.

சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பு வெள்ளி திரையில் கிடைக்காததால் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தார் . ஆனால் பிக் பாஸ் வீட்டில் இவரின் ஆட்டம் ரசிகர்களை தவறியது.

இந்த நிலையில், பிக் பாஸ் எட்டாவது சீசனில் எலிமினேட் ஆன முதலாவது பெண் போட்டியாளரான தர்ஷா குப்தாவுக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும் அவர் 20 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக மொத்தமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.