மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தற்போது வரை எவ்ளோ கலெக்சன் தெரியுமா..?

 

அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ்.

உண்மை சம்பவத்தை திரைப்படமாக செதுக்கி உள்ள படக்குழு தற்போது இப்படத்தின் வெற்றியை கால் மேல் கால் போட்டு கெத்தாக கொண்டாடி வருகிறது .

உலகநாயகன் கமல் ஹாசன், தனுஷ், விக்ரம் என தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குனரை நேரில் அழைத்து மனதார பாராட்டி வருகின்றனர் .

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ள இப்படம் உலகளவில் தற்போது ரூ. 180 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது .

இப்படம் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தற்போது 180 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்ட பரிசுகளை தர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படம் தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர் .