பிரதீப் ஆண்டனி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Nov 6, 2023, 10:05 IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் நேற்று பிரதீப் அந்தோணி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீட்டிற்குள் வாங்கிய ட்ராபிகள் அனைத்தும் போட்டோ எடுத்து வெளியிட்டு ஏதோ என்னால் முடிந்தது என பதிவு செய்துள்ளார்.
மேலும் இவர் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.