ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

 

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வரும் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜெயிலரில் ரஜினியை பார்த்த ரசிகர்கள், பாட்ஷா பட பாணியில் இருக்கிறார் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். . 

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்ற விவரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படத்தின் ஹீரோ ரஜினிகாந்த் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.  கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர்கள் அவருக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.ஜாக்கி ஷெராஃப் ரூ.4 கோடி, தமன்னா பாட்டியா ரூ.3 கோடி, யோகி பாபு ரூ.1 கோடி, ரம்யா கிருஷ்ணா ரூ.80 லட்சம், வசந்த் ரவி ரூ.30 லட்சம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது.

ரஜினிகாந்துக்கு ஜெயிலர் பிளாக் பஸ்டரை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. ‘காவாலா’ பாடலில் தமன்னா பாட்டியாவின் மெட்டுகள் ஹைலைட்டாக இருக்கும். ‘ஹும்’ பாடலில் ரஜினிகாந்த் ஸ்டைல் ​​சூப்பராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.