காதல் படத்தில் நடித்த சரண்யா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ?

 

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் காதல். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் சந்தியா. அதேபோல நடிகர் பரத்திற்கு இந்த படம் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தான் தயாரித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த நடிகையை மறக்க முடியுமா ?

அவருடைய பெயர் சரண்யா நாக், சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 1998ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்த இவர் காதல் படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார். காதல் திரைப்படத்திற்கு பின்னர் இவர் துள்ளுற வயசு என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் ஒரு வார்த்தை பேசு என்ற படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

அதன் பின்னர் தெலுங்கில் இவர் 10th கிளாஸ் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றிபெறவில்லை. அதன் பின்னர் மீண்டும் தமிழில் நடிக்க துவங்கிய சரண்யா 2009ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன்பின்னரும் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகை சரண்யா திருத்தணி கோவிலில் முடி காணிக்கை செலுத்திய புகைப்படம் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

அதன்படி காதல் படத்தில் மிகவும் பிரபலமான சரண்யா தற்போது திருத்தணியில் வைத்து மொட்டை அடித்துக் கொள்ள புகைப்படம் வைரலாகி உள்ளது.