வாலு படத்தில் சிம்புவுக்கும் தங்கையாக நடித்த நடிகை இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

 

வாலு படத்தில் சிம்புவுக்கும் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா சாரதி இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

சென்னையில் பிறந்த இவர், 2012-ம் ஆண்டு வெளியான வழக்கு எண் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, துப்பாக்கி படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் விஜயின் தங்கை கேரக்டரில் நடித்தவர் தான் சஞ்சனா சாரதி. இந்த படத்தில் அவருக்கு ஒரு சில காட்சிகள் இருந்தது என்றாலும் கூட, நடிப்பில் அசத்தியிருப்பார். அதன்பிறகு, 2013-ம ஆண்டு என்றென்றும் புன்னகை திரைபடத்தில் த்ரிஷாவின் தங்கையாக நடித்திருந்த இவர், விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடித்த வாலு படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.அதன்பிறகு தெலுங்கில் படத்தில் நடித்த சஞ்சனா தற்போது நினைவோ ஒரு பறவை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஃபிங்கர்டிப், டைம் என்ன பாஸ், மிஸ்மேட்ச் உள்ளிட்ட வெப் தொடர்களிலும் நடித்துள்ள சஞ்சனா சாரதி, தற்போது மாடர்ன் லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், துப்பாக்கி படத்தில் நடித்த விஜயின் தங்கையா இவர் என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.