நேற்றே தவெக கொடி வெளியிட காரணம் என்ன தெரியுமா?

 

இளைய தளபதி விஜய் உச்ச நடிகராக காணப்படுவதோடு மட்டுமல்லாமல் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் காணப்படுகிறார். கிட்டத்தட்ட ஒரு படத்திற்கு 200 கோடி ரூபா வரையில் சம்பளம் பெற்று வருகிறார். எனினும் விஜய் படத்தை தயாரிப்பதற்கு இயக்குநர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். 

இவ்வாறு திரையுலகில் கலக்கி வரும் விஜய், திடீரென அரசியலில் கால் பதித்து இன்னும் இரண்டு படங்களோடு சினிமா துறையில் இருந்து விலகுவதாக அதிர்ச்சி கொடுத்து இருந்தார். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்து.

அதன்படியே தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து சிறப்பாக செயற்படுத்தி வருகிறார். விஜய்யின் ரசிகர்கள் பலர் அவரது கட்சியில் தொண்டர்களாக பதிவானார்கள்.

ஏற்கனவே கட்சியினுடைய பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும்  ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தளபதி விஜயின் பனையூர் அலுவலகத்தில் 40 அடி கொடிக்கம்பத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஏற்றப்பட்டு, அக்கட்சியின் கொடி மக்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நேற்றைய தினம் பௌர்ணமி என்பதால் விஜய் கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்து உள்ளாராம்.

குறித்த கொடி மஞ்சள் நிறத்தில் காணப்படுவதோடு, நடுவில் விஜயின் முகம் பதித்த சின்னம் காணப்படுகிறது. தற்போது த.வெ.க கட்சியின் கொடி வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளன.