மாமன்னன் பட காம்போ மீண்டும் இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

 

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு ‘மாரீசன்’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரை வெளியிட்டுள்ளது. மான் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில் ‘இன்னைக்கு வேட்டை ஆரம்பம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.