இது தெரியுமா ? பிரபல சன் டிவி சீரியலில் நடிகர் சூரி நடிச்சிருக்காராம்..!
நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு பிரமாதமாக நடித்திருந்தார். அதனாலேயே அவர் பரோட்டா சூரி என்றே அழைக்கப்படுகிறார்.இவர் மதுரையில் அம்மன் எனும் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார்.இவர் வின்னர் படத்தில் கைப்புள்ள கேரக்டரில் நடித்த வடிவேலுவின் அடியாளாக வருவார். சூர்யா, கார்த்தி, விஷால், சிவகார்த்திகேயனுடன் நிறைய ரோலில் நடித்துள்ளார். சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த சூரி பின்னாளில் காமெடினாகவும் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் சீரியலிலும் நடித்துள்ளாராம். இவர் திருமதி செல்வம் தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
திருமதி செல்வம் சீரியலில் நடிகர் சஞ்சீவ், அபிதா (சேது பட நாயகி), வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த சீரியல் 2007ஆம் ஆண்டு சன் டிவியில் தொடங்கப்பட்டது. இது 1360 எபிசோடுகளை கடந்து, 2013 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் செல்வம் மெக்கானிக் கடை வைத்திருப்பார். அங்கு ஒரு மெக்கானிக் பாயாக சூரியும் நடித்திருப்பார். இந்த மெக்கானிக் காட்சிகள் வரும் போது மட்டும்தான் சூரியின் காட்சிகள் வரும். அதில் ஒரு முண்டா பனியன் போட்டுக் கொண்டு நடித்திருப்பார். இந்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.