இது தெரியுமா ? ரகுவரன் அவர்களின் கடைசி காலம் இப்படி தான் இருந்தது..!

 

நடிகர் ரகுவரன் இறக்கும் கடைசி நேரத்தில் என்ன நடந்தது போன்ற விஷயங்கள் குறித்து அவரது சகோதரர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்….அண்ணன் எதற்காக குடித்தார் என்று எங்களுக்கு தெரியாது அப்படி ஒரு குடி பழக்கம் இருந்தது அது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றாகும்…

நிஜ வாழ்க்கையில் பெரிய அளவில் மகிழ்ச்சியாக இருந்ததாக எங்களுக்கு தெரியவில்லை…அவருடைய உடல் நிலை கடைசி காலத்தில் முடியாமல் போவதை அவரே உணர்ந்து இருந்தார்.

யாரடி நீ மோகினி படத்தில் நடித்து முடித்த பிறகு..உடல்நிலை மிகவும் மோசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைக்கேள்விப்பட்டதுமே நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பை எல்லாம் நிறுத்திவிட்டு மருத்துவமனை வந்துவிட்டார் அவர்கள் இருவருக்கும் நல்ல பழக்கம் ஒரு அழகான அன்பான பாண்டிங் இருந்தது.

அண்ணனின் இறப்பு ரஜினி அவர்களை பெரிதும் பாதித்தது ரொம்பவும் அவருக்கு சோகத்தை கொடுத்தது அவரின் கடைசி நாள் அன்று மருத்துவமனையிலேயே ரொம்ப நேரம் இருந்தார் என கூறியுள்ளார் இப்படி பட்ட செய்தி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.