தமிழகத்தில் தாண்டவமாடும் கொரோனா- பிக்பாஸ் ஆரி என்ன செய்தார் தெரியுமா..?

 

தமிழகத்தின் கொரோனா அலை விஸ்வரூபம் எடுத்து வருவதால் பிக்பாஸ் சீசன் 4 வெற்றியாளரான நடிகர் ஆரி, பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கி நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதியதாக 6618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா முதலாவது அலையை விட இரண்டாவது அலை மிகவும் வீரியமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் வைரஸ் பாதிப்பு குறைந்தபாடில்லை. நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பேருந்துகளில் நின்று பயணிக்க தடை, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, வழிபாட்டு தலங்கள் மற்றும் மால்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ஆரி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முகக்கவசம் அணியாமல் பைக்கில் வந்தவர்களுக்கு இலவசமாக மாஸ் வழங்கினார், அதேபோல முகக்கவசம் இல்லாமல் சாலையில் நடந்து சென்றவர்களுக்கும் மாஸ்க் வழங்கினார்.

தவிர பொதுமக்கள் எங்கு சென்றாலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். முடிந்தவரை பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும், இணை நோய் பாதிப்புள்ளவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் உள்ளிட்ட நோய் கட்டுப்பாட்டு அம்சங்களை பொதுமக்களுக்கு நடிகர் ஆரி விளக்கினார்.