தியேட்டரில் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

 

கடந்த வாரம் பிரித்திவிராஜ், அமலாபால் நடித்த ஆடு ஜீவிதம் திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த நிலையில், இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாக உள்ளது என்பது தொடர்பில் தகவல் வெளியாகி  உள்ளது.

அதன்படி, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'ஃபேமிலி ஸ்டார்' படம்  ஏப்ரல் ஐந்தாம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதுபோல தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ள 'டபுள் டக்கர்' என்ற திரைப்படமும் ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் காணப்படும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான 'கள்வன்' திரைப்படம் ஏப்ரல் நான்காம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

இதை அடுத்து செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும்  மனிதனுக்கு இடையிலான தொடர்பை சொல்லும் சயன்ஸ்  திரைப்படமான 'இரவின் கண்கள்' படமும் ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது.  இதில் பாப் சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, டோலி ஐஸ்வர்யா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அத்துடன் கயல் ஆனந்தி நடித்துள்ள 'ஒயிட் ரோஸ்' படமும் ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.