"கோட்" படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போ தெரியுமா ?

 

தளபதி விஜயின் அடுத்த படமான "கோட்" வருகிற செப்டம்பர் 5ஆம் திகதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தமிழ் நாட்டின் மொத்த தியேட்டர்களிலும் "கோட்" திரைப்படம் திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் "கோட்" படத்தின் புதிய செய்தியொன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தளபதியின் "கோட்" படத்தின் ட்ரைலரானது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 இல் வெளியாகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.    

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என அனைவரும் காத்திருக்கும் நேரத்தில் கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்து இருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அர்ச்சனா கூறியதாவது :

‘ஒரு அற்புதமான ட்ரைலரை நாங்கள் தயார் செய்து வருகிறோம். அதனால் அமைதியாக இருந்து, எங்களுக்கு இரண்டு நாட்கள் கொடுங்கள்.’

‘இது பற்றி proper அப்டேட் இன்றுவரும் ‘ என அர்ச்சனா கல்பாத்தி கூறி இருக்கிறார்.