நெட்பிளிக்ஸ் இந்த ஆண்டு எந்தெந்த படங்களை வெளியிடவுள்ளது தெரியுமா ?
Jan 19, 2024, 07:35 IST
நெட்பிளிக்ஸ் இந்த ஆண்டு எந்தெந்த படங்களை வெளியிடவுள்ளது என்ற பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் ‘சொர்க்க வாசல்’.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்.கே.21’. இயக்குனர் கே. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘ரிவால்வர் ரீட்டா’. இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து அரும் ‘மகாராஜா’. இயக்குனர் கணேஷ் ராஜா இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘கண்ணிவெடி’ போன்ற படங்களை வெளியிடவுள்ளது. இது தொடர்பான போஸ்டர்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.