டாப் குக்கு டூப் குக் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

 

சன் டிவியில் துவங்கிய நிகழ்ச்சி தான் டாப் குக்கு டூப் குக். குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்படி விஜய் டிவியில் ஹிட்டானதோ, அதே போன்ற வடிவமைப்பில் இந்த நிகழ்ச்சியை உருவாக்கினார்.

விஜய் டிவியில் குக் வித் கோமாளியின் 4 சீசன்களை இயக்கி வந்த மீடியா மேசன்ஸ் டீம், அங்கிருந்து வெளியேறிய நிலையில், சன் டிவியில் டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சியை துவங்கினார்கள். இந்த நிகழ்ச்சியின் நடுவராக செஃப் வெங்கடேஷ் பட் களமிறங்கினார். இதில் அதிர்ச்சி அருண், மோனிஷா, ஜி.பி. முத்து, தீபா, பரத், தீனா ஆகியோர் டூப் குக் ஆக என்ட்ரி கொடுத்தனர். 

இந்த நிலையில் வெற்றிகரமாக பல எபிசோட்களை கடந்து வந்த டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சியின் பைனல் இன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் நரேந்திர பிரசாத் மற்றும் நடிகை சுஜாதா ஆகியோர் டைட்டிலை வென்று ரூ. 20 லட்சம் பரிசை தொகையை தட்டி சென்றுள்ளனர். ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒருவழியாக இந்த சீசனும் வெற்றி கரமாக நிறைவேறியது. இதோ அந்த புகைப்படம்.